2015-20 ஆம் ஆண்டு அந்நிய வர்த்தகக் கொள்கையின் விரிவாக்கம்
October 2 , 2022 1108 days 615 0
நாணய மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் உலகளாவில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை காரணமாக தற்போதைய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையானது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
தற்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முக்கியப் பொருளாதாரங்களில் மந்த நிலை ஏற்படும் அச்சமானது நிலவி வருகிறது.
இதன் விளைவாக இந்தியாவில் முதலீடுகள் வேகமாக திரும்பப் பெறப்பட்டு அதனால் வெளிநாட்டு நிதிகள் வெளியேறுகின்றன.
உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடி, பணவீக்கம் மற்றும் பணவியல் கொள்கை நெருக்கடி ஆகியவை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பைப் பலவீனப்படுத்துகின்றன.
தற்போது அமெரிக்க டாலர் மதிப்பு 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.6 என்ற வரலாறு காணாத அளவிலும் குறைவாக உள்ளது.
எனவே, நீண்ட கால வெளியுறவுக் கொள்கையினை (2022-27) ஏற்றுக் கொள்வதற்கு தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை.
2015-20 ஆம் காலகட்ட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையானது, சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதோடு இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும் செய்கிறது.