2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் அமலாக்கம்
May 22 , 2023 734 days 344 0
மத்திய சுகாதார அமைச்சகம் பொது மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களின் தர நிலைகளை அறிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் (PwDs) சுகாதார வசதிகள் மற்றும் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டமானது, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான அணுகல் தன்மைக்கானத் தரநிலைகளை வகுக்கும் பல விதிகளை உருவாக்க வேண்டும் மத்திய அரசினை வலியுறுத்துகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உடல் மற்றும் கட்டமைப்புச் சார்ந்தத் தடைகள், தகவல் தொடர்பு தடைகள், மனப்பான்மைத் தடைகள் மற்றும் சமூக மற்றும் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட தடைகளை அகற்றச் செய்வதை நோக்கமாகக் கொண்ட 'சுகாதார பாதுகாப்புக்கான அணுகல் தரநிலைகள்' என்ற கருத்துருவில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.