2017 ஆம் ஆண்டு சதுப்பு நில விதிகளின் கீழ் ஊட்டி ஏரி
July 15 , 2024 373 days 508 0
தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையமானது, 2017 ஆம் ஆண்டு சதுப்பு நிலங்கள் (வளங் காப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் ஊட்டி ஏரி பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) தெற்கு அமர்விடம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம், இந்த ஏரி மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும், அதனை ஒரு சதுப்பு நிலமாகக் கருத முடியாது என்றும் அமர்வு முன்னதாக வாதிட்டது.
2.25 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரியானது, 2011 ஆம் ஆண்டு தேசிய ஈர நிலப் பதிவேடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி 2017 ஆம் ஆண்டு விதிகளின் 4வது விதியின் கீழ் இந்த ஏரி பாதுகாக்கப்பட வேண்டும்.