2017 ஆம் ஆண்டு HIV சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
October 2 , 2023 685 days 393 0
2017 ஆம் ஆண்டு மனித நோயெதிர்ப்புக் குறைபாடு வைரஸ் மற்றும் பெறப்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு நோய் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தினைத் திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது HIV சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
HIV சட்டத்தின் 34(2) வது பிரிவில் கூறப்பட்டுள்ளதன் படி, HIV தொற்று பாதித்த நபர்கள் தொடர்பான வழக்குகளை முன்கூட்டியே தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் பகுதியளவு நீதித் துறை சார்ந்த அமைப்புகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
HIV தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளத்தினை வெளிவராத படி வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.