2017ஆம் “வருடத்திற்கான தொடக்க நிறுவனம்” (‘Start Up of the year’ 2017)
February 20 , 2018 2893 days 1003 0
இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய குறுவிநியோகத் தளமான (Micro-delivery platform) மில்க் பேஷ்கட் (Milk basket) ஆனது 2017ஆம் 'வருடத்திற்கான தொடக்க நிறுவனம்' என்று 7வது சிறு வணிக விருதுகளில் அங்கீகரிக்கப்பட்டது.
வருடத்திற்கான தொடக்க நிறுவனங்கள் என்ற விருதானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பெரியதாக வளரக்கூடிய சிறந்த ஆற்றலைக் கொண்டிருக்கும்7 வருடம் அல்லது அதற்கும் குறைவான வயதைக் கொண்ட இளம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
மிகவும் விரும்பத்தக்க விருதுகள் நிகழ்ச்சியாகக் கருதப்படும் சிறு வணிக விருதுகள்2018 (Small business awards 2018) பிரான்சைஸ் இந்தியா குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா புது தில்லியில் நடைபெற்றது.