2018 ஆண்டின் பார்சூன் இதழினுடைய 50 சிறந்த தலைவர்கள்
May 7 , 2018 2660 days 943 0
பார்சூன் இதழ் அண்மையில் உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பார்சூன் இதழின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியல் வெளியீடானது இன்றைய சவால்களை சந்திக்க முற்படுகின்ற செயல்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் பேச்சாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2018 ஆண்டிற்கான பார்சூன் இதழின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியலில் இந்தியாவின் மனித உரிமை வழக்குரைஞரான இந்திரா ஜெய்சிங், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, கட்டிடவியல் கலைஞரான பால்கிருஷ்ண தோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் இவர்கள் முறையே 20-வது, 24-வது மற்றும் 43-வது இடத்தில் உள்ளனர்.