2018 ஆம் ஆண்டின் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருது
January 29 , 2019 2385 days 742 0
2018 ஆம் ஆண்டின் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருதை ஜெயிந்த் கய்கினி எழுதிய கன்னட புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பான "No Presents Please" என்ற நாவல் வென்றுள்ளது.
இந்த விருதானது டாடா எஃகு கொல்கத்தா இலக்கிய சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த நாவல் தேஜாஸ்வினி நிரஞ்சனா என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்விருதானது முதன்முறையாக ஒரு மொழிபெயர்ப்புப் பணிக்காக வழங்கப்படுகிறது.
தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருதானது சுரினா நரூலா மற்றும் மன்ஹட் நரூலா ஆகியோரால் 2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் தெற்காசியாவின் சிறந்த புனைவு எழுத்துப் பணிக்காக வழங்கப்படுகிறது.