2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி - இத்தாலி
November 15 , 2017 2725 days 1020 0
சுவீடனுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டம் கோல்களின்றி டிரா (0-0) ஆனதால், 2018-ல் இரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் தகுதி வாய்ப்பை இத்தாலி இழந்துள்ளது.
1958-ஆம் ஆண்டு ஸ்வீடன் உலகக் கோப்பையின் போது இதே போன்ற நிலைமையை இத்தாலி சந்தித்தது. அதைத் தொடர்ந்து 60 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இத்தாலி அணி (கிலி அஜ்சூர்ரி) உலகக் கோப்பைக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சுவீடன் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.
4 முறை உலகக் கால்பந்து கோப்பை சாம்பியனான இத்தாலி, இதனோடு சேர்ந்து மொத்தம் 3 தருணங்களில் முறையே 1930, 1958, 2018 ஆகிய வருடங்களுக்கான உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இத்தாலி நாட்டின் தேசிய கால்பந்து அணி கிலி அஜ்சூர்ரி (Gli Azzurri) என்றழைக்கப்படுகிறது. இத்தாலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தாலிய தேசிய அணிகள் மற்றும் தடகள வீரர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய வண்ணத்தால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.