2018 ஆம் ஆண்டின் ஆக்ஸ்பேமின் உலக சமமின்மைக்கான குறியீடு
October 13 , 2018 2446 days 721 0
ஐக்கிய இராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட “ஆக்ஸ்பேம் இண்டர்நேஷனல்” (Oxfam International) என்ற அறக்கட்டளையானது சமமின்மையை குறைப்பதற்கான உறுதிக் குறியீட்டை (Commitment to Reducing Inequality - CRI) சமீபத்தில் வெளியிட்டது.
வருடாந்திரக் குறியீட்டின் 2-வது பதிப்பில் மொத்தமுள்ள 157 நாடுகளில் இந்தியா 147வது இடத்தில் உள்ளது.
ஆசிய நாடுகளுக்கிடையே ஜப்பான் 11-வது இடத்தைப் பிடித்து முன்னிலையில் உள்ளது.
இக்குறியீட்டின் முதலிடத்தில் டென்மார்க் உள்ளது. இந்நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா மற்றும் நார்வே ஆகிய நாடுகள் உள்ளன.
வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சீனா 81வது இடத்தையும் பிரேசில் 39வது இடத்தையும் இரஷ்யா 50-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த அறிக்கையின்படி, சமமின்மையை குறைப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை தென் கொரியா, நமீபியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் எடுத்துள்ளன.
இருந்தபோதிலும் இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் பின்தங்கிய இடத்தில் உள்ளன.