TNPSC Thervupettagam

2018க்கான SDG இந்தியா குறியீடு

December 24 , 2018 2367 days 754 0
  • நிதி ஆயோக்கானது சமீபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals-SDG) இந்தியா குறியீட்டின் அடிப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது
  • இது SDG 2030 இலக்குகளை செயல்படுத்துவதில் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை ஆவணப்படுத்தியுள்ளது.
  • இந்த குறியீட்டின்படி,
    • இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்கள் ஐ.நா.வின் SDG இலக்குகளை அடையும் பாதையில் முன்னணி 3 இடங்களில் உள்ளன.
    • அசாம், பீகார், உத்தரப் பிரதேசம் ஆகியவை தரவரிசையின் கீழ்நிலையில் உள்ளன.
  • இந்த குறியீடானது,
    • மத்திய புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்க அமைச்சகம்
    • உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் மற்றும்
    • இந்திய ஐக்கிய நாடுகள் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • குறியீட்டு மதிப்பு 100 என்பது ஒரு மாநிலமானது 2030 தேசிய இலக்குகளை அடைந்திருப்பதைக் குறிக்கிறது. இந்த SDG இலக்குகள் 2015 செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்