2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் - தேனி
July 8 , 2023 767 days 414 0
2019 ஆம் ஆண்டு தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட P. ரவீந்திரநாத் குமாரின் தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் தேதியன்று அறிவித்தது.
அவர் தான் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரது வருமான ஆதாரங்களை மறைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் வழக்குத் தொடரப்பட்டது.