இரயில் விபத்துக்களால் ஏற்படும் பயணிகள் இறப்பானது பூஜ்ஜியம் என்ற அளவில் கடந்த ஆண்டு இந்திய ரயில்வேத் துறை தனது சிறந்த பாதுகாப்புச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை ரயில்வேத் துறையானது ஒரு மிகச் சிறந்த பாதுகாப்புச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 8 வரையிலான எந்தவொரு ரயில் விபத்திலும் கூட இரயில் பயணிகளின் உயிரிழப்பு என்று எதுவும் இல்லை.
166 ஆண்டுகளுக்கு முன்பு 1853 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரயில்வே அமைப்பு அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர், 2019-2020 ஆம் ஆண்டில் தான் முதல் முறையாக இந்த இலக்கு அடையப் பட்டுள்ளது.