பெங்களூருவின் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (IIM-B) நிறுவன மேலாண்மையின் மேல்நிலை பட்டப்படிப்புக் கல்வியானது ஆசிய பசிபிக் தர வரிசையில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் 2019 ஆம் ஆண்டிற்கான QS Executive MBA தரவரிசையில் உலகளாவிய அளவில் 61-வது இடத்தையும் இது பிடித்துள்ளது.
இதனால் உலகளவில் உள்ள 100 முன்னணிப் பொருளாதாரக் கல்வியகங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய பொருளாதாரக் கல்வியகமாக இது மாறியுள்ளது.
மேலும் IIM-B ஆனது 2019 ஆம் ஆண்டின் தேசிய கல்வியக கட்டமைப்புத் தர வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.