2019 ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பு - மேற்கு வங்காளத்தின் காட்சிப்படம்
January 24 , 2019 2558 days 919 0
2019 ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பிற்காக மேற்கு வங்காள மாநிலத்தின் அணிவகுப்புக்கான காட்சிப் படத்தின் கருத்துருவான "காந்தி – தாகூரின் ஒற்றுமையை" மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் காட்சிப் படமானது "பெலிகாத்தாவில் சாந்தி நிகேதன் மற்றும் காந்தி" என்ற கருத்துருவுடன் காந்தி மற்றும் இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இரு தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறது.
1915 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷியாமொலி இல்லத்தில் மகாத்மா காந்தி தாகூரை சந்தித்ததன் நினைவாக இக்கருத்துருவை மேற்கு வங்க மாநில முதல்வர் வெளியிட்டார்.
பின்ணனி
குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்புக் காட்சிப் படத்தின் கருத்துருவை இந்திய பாதுகாப்புப் படை தேர்ந்தெடுத்தது இதுவே முதல்முறையாகும்.
காந்தியின் 150வது பிறந்த தினத்தின் நினைவாக "காந்திஜி" என்ற கருத்துரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.