2019 ஆம் ஆண்டின் மழைக் காலத்தினிடையேயான மின்னல் அறிக்கை
September 8 , 2019 2322 days 808 0
இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் (India Meteorological Department - IMD) நெருக்கமாகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான காலநிலை மீள் கண்காணிப்பு அமைப்புகள் ஊக்குவிப்பு அமைப்பானது 2019 ஆம் ஆண்டின் மழைக் காலத்தினிடையேயான மின்னல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒடிசாவில் அதிகபட்ச மின்னல் நிகழ்வுகளும் ஏப்ரல் - ஜூலை மாதங்களில் மின்னல் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல்முறையாக நாடு முழுவதும் நிகழ்ந்த மின்னல் தாக்குதல்களையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் இது கணக்கிட்டுள்ளது.
மின்னல், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதன் மூலமான இறப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றிற்கான முன் எச்சரிக்கை முறையை உருவாக்க இது போன்ற ஒரு தரவுத் தளம் பயன்படுத்தப்படும்.