இந்தியத் தேர்தல் ஆணையமானது சமீபத்தில் “2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் : வரைபடம்” என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
இந்த வரைபடமானது தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திரா மற்றும் இதர மற்ற இரு தேர்தல் ஆணையர்களான ராஜீவ் குமார் மற்றும் அனுப் சந்திரா பாண்டே ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இந்த ஆவணமானது ஆராய்ச்சியாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் பயனளிக்கக் கூடியதோடு இந்தியத் தேர்தலின் பரவலான பகுதியினை ஆராயவும் இது உதவும்.
இந்த பொதுத் தேர்தல் வரைபடமானது 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் அனைத்துப் புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளை உள்ளடக்கியதாகும்.