70-வது குடியரசு தினத்திற்கு முன்பாக (25-01-2019) அரசு 2019-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்தது.
பத்ம விபூசன் மற்றும் பத்ம பூசன் ஆகிய விருதுகள் குடிமக்களுக்கு வழங்கப்படுகின்ற முறையே நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையிலான உயரிய விருதுகளாகும்.
இந்த வருடம் இந்த பெருமைமிகு விருதுகளுக்கு 112 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 4 பத்ம விபூசன், 14 பத்ம பூசன் மற்றும் 94 பத்மஸ்ரீ விருதுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பத்ம விபூசன் விதிவிலக்கான மற்றும் மேன்மைமிகு சேவைக்கு அளிக்கப்படுகின்றது.
பத்ம பூசன் உயர்தர சேவைக்கான விருதாகும்.
பத்ம ஸ்ரீ என்பது ஏதேனும் ஒரு துறையில் பங்களித்த மேன்மைமிகு சேவைக்கான விருதாகும்.
விருது பெறுபவர்களில் 21 நபர்கள் பெண்களாவர். மேலும் அப்பட்டியலானது வெளிநாட்டவர்கள் / வெளிநாடு வாழ் இந்தியர்கள் / இந்திய வம்சாவழியினர் / பூர்வகுடி இந்திய மக்கள் ஆகிய பிரிவுகளில் இருந்து 11 நபர்களையும் இறந்து போனவர்கள் பட்டியலில் 3 நபர்களையும் 1 திருநங்கை நபரையும் கொண்டிருக்கும்.
பத்மஸ்ரீ விருதுகளுக்காக பின்வரும் 7 நபர்கள் தமிழ்நாட்டிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.