TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் அஜயா வாரியர் பயிற்சி

February 12 , 2020 1970 days 738 0
  • “அஜயா வாரியர் – 2020” என்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியின் ஐந்தாவது பதிப்பானது ஐக்கிய இராஜ்ஜியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடத்தப்பட இருக்கின்றது.
  • அஜயா வாரியர் ஆனது இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடத்தப்படும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
  • இது முதல்முறையாக 2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • நகர்ப்புற மற்றும் நகர்ப் புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, படைப் பிரிவு அளவிலான கூட்டுப் பயிற்சியை நடத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
  • இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடத்தப்படும் பிற பயிற்சிகள் பின்வருமாறு:
    • கொங்கன் பயிற்சி: இது ஒரு வருடாந்திர கடல்சார் இருதரப்புப் பயிற்சியாகும்.
    • இந்திரா தனுஷ் பயிற்சி: இது ஒரு கூட்டு இருதரப்பு விமானப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்