2020 ஆம் ஆண்டின் உலகளாவிய காற்றின் நிலை குறித்த அறிக்கை
October 28 , 2020 1729 days 669 0
உலகளாவிய காற்றின் நிலை என்பது பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்திடமிருந்து பெற்ற நிபுணத்துவத் தரவுகளுடன் சுகாதாரத் தாக்கங்கள் மையம், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
2019 ஆம் ஆண்டில் நுண்மத் துகள் 2.5 என்ற துகளின் மிக அதிகப் பாதிப்புக்கு உள்ளான முதல் 10 நாடுகளில் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் உள்ளடங்கும்.
2019 ஆம் ஆண்டில் மிக அதிக அளவில் ஓசோன் பாதிப்புக்குள்ளான முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஒட்டு மொத்தமாக, இந்தியாவில் அனைத்து சுகாதார அபாயங்களிடையே நிகழும் இறப்புகளுக்கான ஒரு மிகப் பெரிய அபாயக் கூறாக காற்று மாசுபாடு விளங்கி வருகின்றது.
இந்தியாவானது உலகில் மிக அதிகமான மாசுபாடு பாதிப்பு, அதாவது 83.2 μg /கன மீட்டர் என்ற அளவிற்குப் பாதிப்பை எதிர் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேபாளம் 83.1 μg /கன மீட்டர் பாதிப்பையும் நைஜீரியா 80.1% பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளன.