2020 ஆம் ஆண்டின் டோக்கியோ ஒலிம்பிக்கின் ’குறிக்கோள்
February 18 , 2020 2005 days 798 0
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளின் டோக்கியோ ஒருங்கிணைப்புக் குழுவானது “உணர்ச்சிகளின் மூலம் ஒருங்கிணைதல்” என்ற ஒரு அதிகாரப்பூர்வ குறிக்கோளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்காக “உலகளாவிய மதிப்புகள்” மற்றும் “விளையாட்டின் சக்தியை ஒருங்கிணைத்தல்” ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது.
இந்தக் குறிக்கோள் ஆனது பல்வேறு விளையாட்டுப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து அவர்களின் வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடும் விதமாக விளையாட்டின் சக்தியை எடுத்துக் காட்டுகின்றது.
அலுவல்பூர்வ ஒலிம்பிக் குறிக்கோள் ஆனது “சிட்டியஸ், ஆல்டியஸ், ஃபோர்டியஸ்” அல்லது “வேகமான, உயர்ந்த, வலிமையான” என்பதாகும். ஆனால் இந்த விளையாட்டை நடத்தும் ஒவ்வொரு நகரமும் இந்த விளையாட்டுகளின் பதிப்போடு சேர்ந்து அதன் சொந்த குறிக்கோளைத் தேர்வு செய்கின்றது.