2020 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய உலகளாவியப் பல்லுயிர் கட்டமைப்பு
July 23 , 2021 1459 days 660 0
உயிரியல் பன்முகத் தன்மைச் செயலகத்திற்கான ஐ.நா. மாநாடு இந்தப் புதியக் கட்டமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ வரைவை வெளியிட்டுள்ளது.
இயற்கையையும் அதன் அத்தியாவசியச் சேவைகளையும் மக்களுக்காகப் பாதுகாக்கச் செய்வதற்கு 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய நடவடிக்கைகளை வழி நடத்த இந்தக் கட்டமைப்புப் பயன்படுத்தப்படும்.
பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் தசாப்தம் 2011-2020 முடிவடைந்துள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய இந்த உலகளாவியப் பல்லுயிர்க் கட்டமைப்பானது மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இது “இயற்கையோடு இணக்கமாக வாழ்வது” என்ற 2050 ஆம் ஆண்டின் தொலை நோக்குப் பார்வைக்கான ஒரு படியாகும்.