2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதற்கான ஏலம்
June 15 , 2018 2516 days 836 0
பிபாவின் காங்கிரஸ் அமைப்பு 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்த அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவிற்கு வாய்ப்பளித்துள்ளது.
2026 உலகப்போட்டி, தற்போது ரஷ்யாவில் தொடங்கியுள்ள 32 அணிகள் பங்கேற்கும் முறையில் இருந்து முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் முதல் விரிவுபடுத்தப்பட்ட போட்டியாக இருக்கும்.
முன்னதாக 1994ல் அமெரிக்காவும், 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் மெக்சிகோவும் உலகக் கோப்பை போட்டியை நடத்தியுள்ளன. கனடா ஒருபோதும் ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தியதில்லை, ஆனால் 2015ஆம் ஆண்டு பெண்கள் போட்டியை நடத்தியது.
2018ம் ஆண்டுப் போட்டி மாஸ்கோவில் துவங்கியுள்ள வேளையில், 2022ம் ஆண்டிற்கான போட்டி கத்தார் நாடால் நடத்தப்படும்.