2020 - 21 ஆம் நிதியாண்டிற்கான 15வது நிதி ஆணையத்தின் அறிக்கை
December 7 , 2019 2060 days 793 0
என் கே சிங் தலைமையிலான நிதி ஆணையமானது 2020 - 21 ஆம் நிதியாண்டிற்கான தனது அறிக்கையை இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்துள்ளது.
15வது நிதி ஆணையமானது 2017 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று இந்திய அரசியலமைப்பின் 280வது சரத்தின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவரால் அமைக்கப் பட்டது.
இதன் பணி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ள ஐந்து வருடங்களுக்கான நிதியியல் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதாகும்.
இந்த நிதி ஆணையத்தின் பதவிக் காலம் முதலில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடைய இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் ஒரு மாத காலத்திற்கு, அதாவது நவம்பர் 30 ஆம் தேதி வரை இந்த ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.