2020 ஆப்கானிஸ்தான் மாநாடு
November 29 , 2020
1720 days
694
- இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இணைந்து ஷாஹூத் அணையைக் கட்ட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
- ஆப்கானிஸ்தானில் உயர் தாக்கம் கொண்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களின் மீதான நான்காம் கட்டத்தையும் இந்தியா அறிவித்துள்ளது.
- ஜெனீவாவில் ஏற்பாடு செய்யப்பட்ட 2020 ஆப்கானிஸ்தான் மாநாட்டின் போது இது அறிவிக்கப் பட்டது.
- இந்த மாநாடு ஐ.நா, ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் பின்லாந்து அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப் பட்டது.
- இந்தியாவானது ஏற்கனவே டெலாரம் முதல் சாரஞ்ச் வரை (ஈரானிய எல்லை) 218 கி.மீ நீளம் கொண்ட சாலை கட்டுமானப் பணிகளை முடித்துள்ளது
- இது ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மாற்று இணைப்பை வழங்குகிறது.
- மேலும் இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடத்தையும் கட்ட இந்தியா உதவியுள்ளது.

Post Views:
694