“அஜயா வாரியர் – 2020” என்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியின் ஐந்தாவது பதிப்பானது ஐக்கிய இராஜ்ஜியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடத்தப்பட இருக்கின்றது.
அஜயா வாரியர் ஆனது இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடத்தப்படும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
இது முதல்முறையாக 2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
நகர்ப்புற மற்றும் நகர்ப் புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, படைப் பிரிவு அளவிலான கூட்டுப் பயிற்சியை நடத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடத்தப்படும் பிற பயிற்சிகள் பின்வருமாறு:
கொங்கன் பயிற்சி: இது ஒரு வருடாந்திர கடல்சார் இருதரப்புப் பயிற்சியாகும்.
இந்திரா தனுஷ் பயிற்சி: இது ஒரு கூட்டு இருதரப்பு விமானப் பயிற்சியாகும்.