2020 ஆம் ஆண்டின் இளம் கணிதவியலாளர்களுக்கான ராமானுஜர் விருது
December 16 , 2020 1690 days 957 0
இந்த விருதானது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள அசல் மற்றும் பயன்பாட்டுக் கணிதவியல் மையத்தைச் சேர்ந்த கணிதவியலாளரான டாக்டர் கரோலின் அரௌஜோ என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதானது சர்வதேசக் கோட்பாட்டு இயற்பியல் மையம் மற்றும் சர்வதேசக் கணித ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்டு, வளரும் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.
இவ்விருதானது இயற்கணித வடிவியலில் தலைசிறந்த அவருடைய பணிக்காக வேண்டி அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறும் இந்தியாவைச் சேராத முதலாவது கணிதவியலாளர் இவரே ஆவார்.
டாக்டர் அரௌஜோ அவர்கள் சர்வதேசக் கணித ஒன்றியத்தில் கணிதத்திற்கான பெண்கள் குழுவின் துணைத் தலைவராக உள்ளார்.