2020 ஆம் ஆண்டின் கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான உலகளாவிய நிலை குறித்த அறிக்கை
December 22 , 2020 1677 days 660 0
இது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையிலிருந்து வெளியிடப்படும் கார்பன் உமிழ்வுகள் 2019 ஆம் ஆண்டில் அதிகமாக இருந்தன.
2019 ஆம் ஆண்டில் கட்டிடத் துறையானது மூன்றில் ஒன்று என்ற அளவிற்கு மேற்பட்ட அளவில் கார்பன் டை ஆக்ஸைடு (CO2) உமிழ்வுகளை வெளியிட்டுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டில் 9.95 ஜிகா டன்கள் CO2 உமிழ்வு என்ற அளவிற்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத்திற்கான உலகளாவியக் கூட்டமைப்பு என்பது அரசாங்கங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றிற்கான ஒரு உலகளாவியத் தளமாகும்.
இது சுழிய உமிழ்வு திறனுள்ள மற்றும் தாங்கு தன்மையுள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத் துறை நோக்கிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக வேண்டி பணியாற்றுகின்றது.