December 24 , 2020
1786 days
702
- ஸ்ரீநகரில் உள்ள அமர்சிங் கல்லூரிக்கு யுனெஸ்கோவின் கீழ் புகழ்பெற்ற தகுதிநிலை விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- காஷ்மீரில் உள்ள ஒரு கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு வழங்கப் படும் முதலாவது சர்வதேச விருது இதுவாகும்.
- மலபாரி வளாகக் கட்டிடம், மும்பையின் சேவா சதன் சமூகம் ஆகியவையும் இந்தத் தகுதிநிலை விருதைப் பெற்றுள்ளன.
- தில்லியின் பாரம்பரியப் பூங்காவானது சிறப்புமிகு விருதினைப் பெற்றுள்ளது.
- யுனெஸ்கோ ஆனது 2020 ஆம் ஆண்டு விருதுகளில் நீடித்த மேம்பாட்டிற்கான சிறப்பு அங்கீகாரத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- புது தில்லயில் உள்ள சுந்தர் காப்பகமானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதைப் பெற்றுள்ளது.
- மேலும் கேரளாவின் திருச்சூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் உள்ள கூத்தம்பலம் தனித்துவப் பிரிவு விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Post Views:
702