2020 ஆம் ஆண்டின் பயோ ஆசியாவின் மரபணுப் பள்ளத்தாக்கு சிறப்புமிகு விருது
February 17 , 2020 1980 days 686 0
பின்வரும் நபர்களுக்கு 2020 ஆம் ஆண்டின் பயோ ஆசியாவின் மரபணுப் பள்ளத்தாக்கு சிறப்புமிகு விருதானது வழங்கப்பட இருக்கின்றது. அவர்கள் முறையே:
அமெரிக்க நோய் எதிர்ப்பியல் நிபுணர் மற்றும் புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் கார்ல் எச் ஜூன் மற்றும்
நோவார்டிஸ் என்ற மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் வசந்த் நரசிம்மன்.
மரபணுப் பள்ளத்தாக்கு சிறப்புமிகு விருதானது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றிய புகழ்பெற்ற நபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரித்து, அவர்களை கௌரவிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகின்றது.