TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி – ஆண்ட்ரியா மெஸா

May 18 , 2021 1643 days 738 0
  • மெக்சிகோ அழகியான (மிஸ் மெக்சிகோ) ஆண்ட்ரியா மெஸா என்பவர் 69வது 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப் பட்டார்.
  • (மிஸ் இந்தியா) இந்திய அழகியான  அட்லின் கேஸ்டிலினோ என்பவர் 4வது இடத்தைப் பெற்று உள்ளார்.
  • பிரேசிலின் ஜுலியா காமா என்பவரும் பெருவின் ஜானிக் மெக்டா என்பவரும் இறுதிச் சுற்றிற்குத் தேர்வான முதல் இரண்டு நபர்களாவர்.
  • இந்தியாவின் அட்லின் கேஸ்டிலினோ மற்றும் டொமினிகன் குடியரசின் சிம்பெர்லி பெரேஸ் ஆகியோர் முறையே இறுதிச் சுற்றிற்குத் தேர்வான மூன்றாவது மற்றும் நான்காவது நபர்களாவர்.
  • இந்த ஆண்டு அழகிப் போட்டியானது அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் மியாமி நகரில் நடத்தப் பட்டது.
  • தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகியான ஜோஜிபினி டுன்ஸி என்பவர் தற்போதைய பிரபஞ்ச அழகிக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்