மெக்சிகோ அழகியான (மிஸ் மெக்சிகோ) ஆண்ட்ரியா மெஸா என்பவர் 69வது 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மகுடம் சூட்டப் பட்டார்.
(மிஸ் இந்தியா) இந்திய அழகியான அட்லின் கேஸ்டிலினோ என்பவர் 4வது இடத்தைப் பெற்று உள்ளார்.
பிரேசிலின் ஜுலியா காமா என்பவரும் பெருவின் ஜானிக் மெக்டா என்பவரும் இறுதிச் சுற்றிற்குத் தேர்வான முதல் இரண்டு நபர்களாவர்.
இந்தியாவின் அட்லின் கேஸ்டிலினோ மற்றும் டொமினிகன் குடியரசின் சிம்பெர்லி பெரேஸ் ஆகியோர் முறையே இறுதிச் சுற்றிற்குத் தேர்வான மூன்றாவது மற்றும் நான்காவது நபர்களாவர்.
இந்த ஆண்டு அழகிப் போட்டியானது அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் மியாமி நகரில் நடத்தப் பட்டது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகியான ஜோஜிபினி டுன்ஸிஎன்பவர் தற்போதைய பிரபஞ்ச அழகிக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டினார்.