2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச இடம்பெயர்வு சிறப்பம்சங்கள்
January 20 , 2021 1681 days 956 0
ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் “2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச இடம்பெயர்வு சிறப்பம்சங்கள்” என்ற அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி, இந்திய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை உலகிலேயே மிகப் பெரியதாகும்.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் (3.5 மில்லியன்), சவுதி அரேபியா (2.5 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (2.7 மில்லியன்) போன்ற பல முக்கிய நாடுகளில் பரவியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரைக் கொண்ட மற்ற நாடுகள் ஓமன், ஆஸ்திரேலியா, குவைத், கனடா, கத்தார், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகும்.
மெக்ஸிகோ, சீனா, ரஷ்யா மற்றும் சிரியா ஆகியவை அதிகளவில் புலம்பெயர்ந்தோர் மக்களைக் கொண்ட மற்ற இதர நாடுகளாகும்.
சர்வதேச புலம்பெயர்ந்தோரின் மையமாக அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நாடு அமெரிக்கா ஆகும்.
அதைத் தொடர்ந்து ஜெர்மனி, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகியவை உள்ளன.