2020 ஆம் ஆண்டில் ஆசியா மற்றும் பசிபிக்கில் நீடித்த மேம்பாட்டிற்கான புவியிடங்காட்டி நடைமுறைகள்
November 26 , 2020 1749 days 723 0
இந்த அறிக்கையானது ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இந்தியா தற்போதைய நகரங்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவதில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றது என்று கூறுகின்றது.
இது “புவன்” என்பதனால் மேற்கொள்ளப் படும் செயல்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றது.
“புவன்” (BHUVAN) என்பது இஸ்ரோவினால் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் ஒரு தேசிய புவியிடங்காட்டித் தளமாகும்.
இஸ்ரோவானது தேசிய அளவில் நோய்த் தொற்றைக் கண்காணிக்கவும் தற்போதைய நிலைமை குறித்து பொது மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவும் வேண்டி “புவன் - கோவிட்” என்ற ஒரு புவியிடங்காட்டித் தளத்தை உருவாக்கி அதனைத் திருத்தியமைத்து உள்ளது.