2020 ஆம் ஆண்டில் டைம்ஸின் 100 மிகவும் சக்திமிக்க மனிதர்களின் பட்டியல்
September 26 , 2020 1768 days 796 0
டைம் பத்திரிக்கையானது இந்த ஆண்டில் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய 100 முன்னோடிகள், தலைவர்கள், முன்னிலையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பெருந்தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சாஹீன் பாஹ் போராட்டத்தில் மக்கள் முகமாக உருவெடுத்த பில்கிஸ், நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா ஆவார்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மற்றும் மருத்துவ நுண் உயிரியல் பேராசிரியரான ரவீந்திர குப்தா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.