2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலின் சிறப்பம்சங்கள்
November 7 , 2020 1899 days 853 0
அமெரிக்காவில் செனட் சபைக்குத் தேர்வான முதலாவது மூன்றாம் பாலினத்தவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சாரா மெக்பிரைடு என்பவர் ஆவார்.
இவர் தெலாவேர் மாகாணத்தில் வெற்றி பெற்றார்.
இவர் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்டீவ் வாஷிங்டன் என்பவரைத் தோற்கடித்தார்.
வெர்மோன்ட்ஸின் டெய்லர் ஸ்மால் என்பவர் பிரதிநிதிகள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அதே நேரத்தில் ஒரு மாகாண சட்டப் பேரவைக்குத் இனத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலாவது திருநம்பி கான்சாஸைச் சேர்ந்த ஸ்டீபைன் பயர்ஸ் என்பவராவார்.
ஒக்லஹோமாவில், மாகாண சட்டமன்றத்தில் இடம் பிடித்த முதலாவது இருபாலின உறுப்பினர் மௌரி டயர்னர் என்வராவார்.
டாக்டர் அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 4 இந்திய-அமெரிக்கர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.