இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தினால் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான தரவின்படி, 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 10.9% ஆக உள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது பொது முடக்கத்தின் காரணமாக எப்பொழுதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் மிகவும் அதிகபட்சமாக 23.52% என்ற அளவை எட்டியது.
இதே நிலையானது 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் 23.48% என்ற அளவுடன் தொடர்ந்து நீடித்தது.
ஆனால் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏற்பட்ட கணிசமான வேலைவாய்ப்பின்மைக் குறைவு மற்றும் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தின் ஜிஎஸ்டி வசூலானது 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தின் ஜிஎஸ்டி வசூலில் 91% என்ற அளவிலான வசூல் ஆகியவற்றைக் கணக்கிடும் பொழுது இந்தியப் பொருளாதாரமானது தற்பொழுது மிகக் கடுமையான நிலையைக் கடந்து விட்டது என்று பொருள் கொள்ள முடியும்.
2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நாட்டின் மிகக் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதமானது அஸ்ஸாம் மாநிலத்தில் (0.6%) பதிவாகியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிடையே ஹரியானா மாநிலமானது 33.6% என்ற விகிதத்துடன் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மிக உயரிய வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது.