இந்த அறிக்கை அமெரிக்காவின் உள்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது நாடுவாரியாக மனித உரிமைகளின் நிலையைப் பற்றிய விவாதங்களைக் கொண்டுள்ளது.
இது ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் (Congress) சமர்ப்பிக்கப் படுகின்றது.
முக்கியமான விபரங்கள்
கருத்துச் சுதந்திரத்தை அரசு வெகுவாக ஆதரித்தாலும், தங்களது கருத்து அறிக்கைகளிலும் சமூக ஊடகங்களிலும் இந்திய அரசினை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும் அவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதும் தொடர்கிறது.
இணையதள நிறுவனங்களிடமிருந்துப் பயனாளிகளின் தரவுகளைப் பெறுவதற்கான அரசின் கோரிக்கைகள் வியக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
அரசானது 2019 ஆம் ஆண்டில் பேஸ்புக்கிடமிருந்து 49,382 தரவுகளைப் பெறுவதற்கான கோரிக்கைகளை விடுத்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டிலிருந்து 32% அதிகமாகும்.
அதே காலகட்டத்தில் அரசின் கோரிக்கை கூகுளிடம் 69%மும், டிவிட்டரிடம் 68%மும் அதிகரித்துள்ளது.