2020 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கிற்கான சின்னங்கள்
March 5 , 2018 2625 days 1145 0
2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் (Olympic) மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் (Paralympic) போட்டிகளுக்கான சின்னங்களாக (Mascots) அசாத்திய சக்திகளுடைய இரு எதிர்காலத்திய நரி போலான படைப்புகளை (Futuristic Fox-like features with Supernatural Power) ஜப்பான் தேர்ந்தெடுத்துள்ளது.
சுமார் 16,769 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 3 சின்ன ஜோடிகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். அதிலிருந்து தற்போது இந்த ஒரு ஜோடி சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கார்ட்டூன் கதாபாத்திர வடிவமைப்பாளரான ரியோ டானிகுச்சி (Ryo Taniguchi) என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சின்னங்களுக்கு இவ்வாண்டின் இறுதியில் பெயர் சூட்டப்பட உள்ளது.
ஜப்பான் நாட்டினுடைய “Yoi Don!” எனும் டோக்கியோவின் 2020 ஆண்டிற்கான தேசிய கல்வி திட்டத்தின் ஒருபகுதியாக இந்த சின்னத்தின் தேர்ந்தெடுப்பிற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Yoi Don என்பதன் பொருள் ‘Get Set’ என்பதாகும்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆனது 2020 ஆம் ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்டு 9 வரை நடைபெற உள்ளது. பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறஉள்ளது.