2021–25 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வன கார்பன் உறிஞ்சு பகுதி
October 27 , 2025 5 days 58 0
2021–25 வரையிலான ஆண்டுகளில் முறையே 1,150 Mt CO₂, 840 Mt CO₂ மற்றும் 410 Mt CO₂ வருடாந்திர நீக்கங்களைப் பதிவு செய்து ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை வன நிலத்தில் உலகளாவிய கார்பன் பிரித்தெடுப்பில் முன்னிலை வகித்துள்ளன.
பிரேசில் (1,420 Mt CO₂), காங்கோ ஜனநாயகக் குடியரசு (160 Mt CO₂) மற்றும் பெரு (130 Mt CO₂) போன்ற நாடுகளில் நிகர வன மாற்றத்தின் காரணமாக மிகப்பெரிய உமிழ்வு பதிவானது.
ஒட்டு மொத்தமாக, இந்த காலக் கட்டத்தில் உலகளாவிய காடழிப்பில் முதல் பத்து நாடுகள் 70 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டிருந்தன.
2021 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு சராசரியாக 150 மெட்ரிக் டன் CO₂ வாயுவினை நீக்கியதுடன் வனத்தின் கார்பன் பிரித்தலில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (32 சதவீதம்) ஆக, தோராயமாக 4.14 பில்லியன் ஹெக்டேர்கள் பரப்பில் காடுகள் அமைந்துள்ளன.