2021 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்
January 15 , 2021 1644 days 550 0
சுரிநாமின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிபரான சந்திரகாபிரசாத் சந்தோகி அவர்கள் 2021 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.
இதற்கு முன்பு சுரிநாமின் அதிபர் பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளதைத் தொடர்ந்து இவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.
சுரிநாம் இதற்கு முன்னர் டச்சு நாட்டின் காலனியாக இருந்தது.
இங்கு இந்திய வம்சாவளி மக்கள் மிகப்பெரிய பூர்வக்குடி குழுக்களாக உள்ளனர்.
சுரிநாம் ஆனது தென் அமெரிக்காவின் வடகிழக்கு அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.