நாட்டில் ஒரு பெண்ணுக்கு பிறக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையாக கணக்கிடப் படும் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) ஆனது, 2020 ஆம் ஆண்டைப் போலவே 2021 ஆம் ஆண்டிலும் 2.0 ஆக மாறாமல் உள்ளது.
பீகார் மாநிலத்தில் 3.0 என்ற மிக அதிகபட்ச TFR விகிதமும், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் 1.4 என்ற குறைவான TFR விகிதமும் பதிவாகியுள்ளன.
1971 ஆம் ஆண்டில் சுமார் 41.2% ஆக இருந்த 0 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 24.8% ஆக படிப்படியாகக் குறைந்துள்ளது.
"15 முதல் 59 வயதிற்குட்பட்ட பொருளாதார ரீதியாக செயல்பாட்டில் ஈடுபடும் மக்கள் தொகையின் விகிதம் அதே காலக் கட்டத்தில் சுமார் 53.4 சதவீதத்திலிருந்து 66.2% ஆக அதிகரித்துள்ளது."
அதே காலக் கட்டத்தில், 65க்கும் மேற்பட்ட வயதிலான முதியோர் எண்ணிக்கை சுமார் 5.3 சதவீதத்திலிருந்து சுமார் 5.9% ஆகவும், 60க்கும் மேற்பட்ட வயதிலான முதியோர் எண்ணிக்கையானது 6% முதல் 9% ஆகவும் அதிகரித்துள்ளது.
கேரளாவில், மொத்த மக்கள் தொகையில் 14.4% பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிலான முதியோராக உள்ளதுடன் இந்தப் பிரிவின் கீழ் மிக அதிக சதவீத மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு (12.9%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (12.3%) ஆகியவை மிகவும் அதிக சதவீதத்திலான முதியோர் எண்ணிக்கையினைக் கொண்ட மற்ற இரண்டு மாநிலங்களாகும்.
பீகார் (6.9%), அசாம் (7%) மற்றும் டெல்லி (7.1%) ஆகிய மாநிலங்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் மிகக் குறைந்த சதவீதம் பதிவாகியுள்ளது.
1990 ஆம் ஆண்டில் 19.3 வயதாக இருந்த பெண்களுக்கான சராசரி திருமண வயதானது, 2021 ஆம் ஆண்டில் 22.5 வயதாக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் 2.1 என்ற மாற்றீட்டு TFR ஆனது எட்டப் பட்டுள்ளது.
தற்போதைய TFR நிலையானது டெல்லியில் 1.4 ஆகவும், மேற்கு வங்காளத்தில் 1.4 ஆகவும், தமிழ்நாட்டில் 1.5 ஆகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 1.5 ஆகவும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 1.5 ஆகவும், கேரளாவில் 1.5 ஆகவும், மகாராஷ்டிராவில் 1.5 ஆகவும், பஞ்சாபில் 1.5 ஆகவும், இமாச்சலப் பிரதேசத்தில் 1.6 ஆகவும், தெலுங்கானாவில் 1.6 ஆகவும், கர்நாடகாவில் 1.6 ஆகவும், ஒடிசாவில் 1.8 ஆகவும், உத்தரகாண்ட்டில் 1.8 ஆகவும், குஜராத்தில் 2.0 ஆகவும், ஹரியானாவில் 2.0 ஆகவும் மற்றும் அசாமில் 2.1 ஆகவும் பதிவாகியுள்ளது.