சமீபத்தில் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட இந்தியக் குற்ற அறிக்கையின் படி இத்தகவலானது கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக முதியோர் கொலைகள் நடந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொலைகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கொலைகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன.
சமீப ஆண்டுகளில் முதல் முறையாக 2021 ஆம் ஆண்டில், முதியோர் கொலைகளில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
முதியோர்களின் கொலைகளைப் பொறுத்த வரையில் தமிழகம்தான் குற்ற விகிதத்திலும் முதலிடத்தில் உள்ளது.
ஒரு இலட்சம் மக்கள்தொகையில் எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன என்பதை மதிப்பிட்டுக் குற்ற விகிதம் கணக்கிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் கணிக்கப்பட்ட முதியோர்களின் சதவீதமானது இந்திய நாட்டிலேயே இரண்டாவது அதிகபட்ச அளவாக 13.6 % ஆக இருந்தது.
கேரளாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 16.5% ஆக அதிக அளவில் உள்ளனர்.
இத்தகவலானது, மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் முதியோர் என்ற அறிக்கையின் படி கூறப்பட்டுள்ளது.