2021-2030 காலகட்டத்திற்கான மக்கள்தொகை கொள்கை – உத்தரப் பிரதேசம்
July 14 , 2021 1513 days 1070 0
உத்தரப் பிரதேச அரசானது உத்தரப் பிரதேச மக்கள் தொகை (கட்டுப்பாடு, நிலைப்பாடு மற்றும் நலம்) மசோதா, 2021 என்று தலைப்பிடப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை முன்மொழிந்துள்ளது.
2021-2030 காலகட்டத்திற்கான புதிய மக்கள்தொகை கொள்கையினையும் உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இரு குழந்தைகளுக்கு மேல் கொண்டிருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க இந்த மசோதா தடை விதிக்கிறது.
மேலும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது பதவி உயர்வு பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் இவர்களுக்குத் தடை விதிக்கப் படுகிறது.
மேலும் அரசு மானியங்களைப் பெறுவதற்கும் இவர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்தப் புதிய கொள்கையில் மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு உதவும் நபர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளன.
இரு குழந்தை முறையைப் பின்பற்றும் அரசுப் பணி அதிகாரிகளுக்கு அவர்களின் முழு பணிக்காலத்தின் போது கூடுதலாக இரண்டு சம்பள உயர்வுகள் வழங்கப்படும்.
முழு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுடன் கூடிய 12 மாதகால மகப்பேறு அல்லது தந்தைப் பேறு விடுப்பானது அவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (National Pension Scheme) கீழ், பணியமர்த்துபவர் பங்களிப்பு நிதியில் 3% அதிகரிக்கப்படும்.