TNPSC Thervupettagam

2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு

April 7 , 2022 1168 days 478 0
  • 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 418 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • சரக்கு ஏற்றுமதியின் உயர்வில் முக்கியப் பங்கு வகித்த துறைகளில் பொறியியல், பெட்ரோலியப் பொருட்கள், நகைகள், இரத்தினங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் வேதிப் பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.
  • 2021-22 ஆம் நிதியாண்டின் போது நாட்டின் சரக்கு வர்த்தகமானது, (இறக்குமதி மற்றும் ஏற்றுமதி) 1 டிரில்லியன் டாலர்களை எட்டியது.
  • இந்திய இறக்குமதிகளின் மதிப்பும், ஒரு சாதனை அளவான 610 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்ட சரக்கு மதிப்பும்  ஒரு சாதனை அளவான 40.38 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • 2021-21 ஆம் ஆண்டில், நாட்டின் சரக்கு ஏற்றுமதியின் மதிப்பு 292 பில்லியன் டாலர்கள் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் வேளாண் ஏற்றுமதியின் மதிப்பு 48 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
  • பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில் முன்னிலையிலுள்ள நாடுகள்: அமெரிக்கா, வங்காள தேசம், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம், ஹாங் காங், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்