2021 ஆம் ஆண்டிற்கான உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை
October 8 , 2021 1384 days 632 0
மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா, ‘உலக குழந்தைகளின் நிலை 2021 : என் மனதில் : குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
இந்த அறிக்கையானது யுனிசெஃப்பின் உலகளாவிய ஒரு முதன்மை வெளியீடாகும்.
உலகளவில் 15 முதல் 24 வயதிற்குட்பட்ட 5 இளம் வயதினரில் ஒருவர் மனச்சோர்வு உடையவர்களாகவும் அல்லது சில வேலைகளைச் செய்வதில் சிறிதும் ஆர்வம் காட்டாத நபர்களாகவும் உள்ளனர்.
இந்தியாவில் 7 இளம் வயதினரில் ஒருவர் மனச்சோர்வு உடையவர்களாகவும் அல்லது சில வேலைகளைச் செய்வதில் சிறிதும் ஆர்வம் காட்டாத நபர்களாகவும் உள்ளனர்.