2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய தலைமைத்துவ மனிதநேய விருதுகள்
October 11 , 2021 1495 days 709 0
அமெரிக்க-இந்திய வணிகச் சபையானது 2021 ஆம் ஆண்டு உலகளாவிய தலைமைத்துவ மனிதநேய விருதுகளை அக்செஞ்சர், IBM மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தது.
பெருந்தொற்றிற்குஎதிரான போராட்டத்திற்கான உலகளாவிய செயற்குழுவிற்குவலுவான தலைமைத்துவத்தினையும் பங்களிப்புகளையும் வழங்கியதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
இந்திய கருதுகோள் உச்சி மாநாட்டின் போது அக்செஞ்சர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் தலைவரான ஜுலி ஸ்வீட், IBM நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் தலைவரான அர்விந்த் கிருஷ்ணா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவருமான பிராட் ஸ்மித் ஆகியோருக்கு இந்த மதிப்பு மிக்க விருதுகள் வழங்கப்படும்.