2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்தியத் திரைப்பட ஆளுமை விருது
November 23 , 2021 1322 days 507 0
நடிகரும் பா.ஜ.க. தலைவருமான ஹேமா மாலினி மற்றும் பாடலாசிரியரும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகியோருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்பட ஆளுமை என்ற விருதானது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகளானது கோவாவில் நடைபெற உள்ள இந்தியாவின் மிகப்பெரிய விருது வழங்கும் விழாவான 52வது இந்திய சர்வதேசத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் (2021) வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டில், ஹாலிவுட்டின் பிரபலமான மார்ட்டின் ஸ்கோர்செஸி (Martin Scorsese) மற்றும் ஹங்கேரியத் திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ (Istevan Szabo) ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதானது வழங்கி கௌரவிக்கப் படவுள்ளது.