1.1 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதன் மூலம், முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு இதன் அளவு 23.7% உயர்ந்துள்ளது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய குற்றப் புள்ளி விவரங்களின் படி இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மொத்தம் 24,500 பேர் கடந்த ஆண்டு இறுதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது இன்னும் அதிகமாக தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள நிலையில் இது 2017ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமாக உள்ளது.
குண்டர் சட்டம் (மாநிலம் மற்றும் மத்திய அளவில்) (29,306) மற்றும் போதைப் பொருட்கள் மற்றும் உளவியல் சார்ந்த போதைப் பொருள்கள் ஆகியவற்றில் சட்ட விரோதமாக கடத்துதலைத் தடுத்தல் சட்டம், 1988 (1,331) ஆகியவற்றின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பது குறித்தத் தரவுகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்துள்ளது.