2021 ஆம் ஆண்டு ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை – டைம்ஸ் உயர் கல்வி இதழ்
June 10 , 2021 1530 days 815 0
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், ரூபாரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், இந்தூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை ஆசியாவின் 100 முன்னணிப் பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது 37வது இடத்தில் உள்ளது.
ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 55வது இடத்தில் உள்ளது.
இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 78வது இடத்தில் உள்ளது.
சீனாவின் சிங்க்வா (Tsinghua University) பல்கலைக்கழகமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
அதில் இரண்டாவது இடத்தினையும் சீனாவிலுள்ள பீகிங் பல்கலைக்கழகமே (Peking University) பெற்றுள்ளது.