2021 ஆம் ஆண்டு தீர்ப்பாயச் சட்டம் - உச்ச நீதிமன்றம்
November 23 , 2025 5 days 36 0
2021 ஆம் ஆண்டு தீர்ப்பாயச் சட்டத்தின் முக்கிய விதிகளை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தீர்ப்பாய நியமனங்கள், செயல்பாடு மற்றும் சம்பளம் மீது மத்திய அரசுக்கு அதிகப் படியான கட்டுப்பாட்டை இந்தச் சட்டம் வழங்கியது.
அரசியலமைப்புத் தேவைகளான தன்னாட்சி, பாரபட்சமற்ற தன்மை மற்றும் பயனுள்ள தீர்ப்பு வழங்கலை இந்தச் சட்டம் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக நீதிமன்றம் கூறியது.
தீர்ப்பாயங்களில் தன்னாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக நான்கு மாதங்களுக்குள் ஒரு தேசியத் தீர்ப்பாய ஆணையத்தை நிறுவுமாறு மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைப் புறக்கணித்து, 2021 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட அவசரச் சட்டத்தின் "மறுபதிப்பு" என்று 2021 சட்டம் கருதப் பட்டது.
தவறான விதிகளை மீண்டும் தொகுப்பதன் மூலம் நாடாளுமன்றம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீற முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
2021 ஆம் ஆண்டு சட்டம் ஒன்பது சிறப்புத் தீர்ப்பாயங்களை ஒழித்து, அவற்றின் செயல்பாடுகளை உயர் நீதிமன்றங்கள் மற்றும் வணிக நீதிமன்றங்களுக்கு மாற்றி, அவற்றின் பணிச் சுமையை அதிகரித்தது.